×

நண்பர்களுடன் நடந்த சண்டையில் வாலிபர் அடித்துக்கொலை: விசாரணையில் திடுக் தகவல்கள்

ஆவடி: சென்னை அடுத்த செங்குன்றம், பம்மதுகுளம், சரத் கண்டிகை, நெல்லூர் அம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் வெங்கடேஷ் (22). இவர் பெயிண்டர். இவரது மனைவி யாஸ்மின் (19). 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்ற இவர்களுக்கு யோகேஸ்வரன் என்ற 9 மாத ஆண் குழந்தை உள்ளது. வெங்கடேஷுக்கு இருதயக் கோளாறு பிரச்சனை இருந்ததால் சென்னை பெரம்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். வேலை தொடர்பாக இன்டர்வியூக்கு செல்வதாக மனைவி யாஸ்மினிடம் கூறிவிட்டு சென்ற வெங்கடேஷ் வீட்டுக்கு வரவில்லை. அவரது செல்போனுக்கு மனைவி தொடர்புகொண்டபோது விரைவில் வீட்டுக்கு வந்து விடுவதாக கூறியுள்ளார். இந்த நிலையில், மாலையில் வெங்கடேஷுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளதாகவும் அவரை கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அழைத்து செல்வதாகவும் நண்பர் ஜீவா என்பவர் யாஸ்மினுக்கு செல்போனில் தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து யாஸ்மின் உறவினர்களுடன் கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு வந்து பார்த்தபோது வெங்கடேஷ் இறந்தது தெரிந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த யாஸ்மின், ஜீவாவிடம் விசாரித்தபோது முன்னுக்கு பின் முரணான தகவல்களை தெரிவித்துள்ளார். இதுகுறித்து யாஸ்மின் ஆவடி டேங்க் பேக்டரி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரில், ‘’தனது கணவர் வெங்கடேஷ் இறப்பில் சந்தேகம் உள்ளது.போலீசார் தீவிர விசாரணை நடத்தி இறப்பு குறித்து காரணம் அறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என கூறியிருந்தார். இதன்படி இன்ஸ்பெக்டர் ராஜீவ் பிரின்ஸ் ஆரோன் தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதல் கட்ட விசாரணையில், ‘’வெங்கடேஷ், நண்பர்களுடன் காட்டூர் பகுதியில் உள்ள விளையாட்டு மைதானத்துக்கு சென்றுள்ளார். அங்கு நண்பர் ஒருவருடன் குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் வெங்கடேஷை தள்ளிவிட்டதில் மூக்கில் அடிபட்டு ரத்தம் கொட்டியுள்ளது. உடனடியாக அவரை கொள்ளுமேட்டில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்து சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு அளித்துவிட்டு மேல் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு வெங்கடேஷ் இறந்துவிட்டார் என்று தெரியவந்தது….

The post நண்பர்களுடன் நடந்த சண்டையில் வாலிபர் அடித்துக்கொலை: விசாரணையில் திடுக் தகவல்கள் appeared first on Dinakaran.

Tags : Waliber ,AVADI ,VENKADESH ,NELLORE AMMAN ,CHENNAI ,BAMMATUGULAM ,SARAT KANDYKAI ,STREET ,
× RELATED சென்னை ஆவடி அருகே தனியார் வங்கி...